உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கிய பைசா நகர சாய்ந்த கோபுரம் ஒரேயடியாக சாய்ந்து விழுந்துவிடாமல் தடுப்பதற்காக நான்கு கோடி டாலர்கள் செலவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டம் பலனளித்துள்ளதா என்பதைத் தீர்மானிப்பதற்காக தற்போது சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. சாய்ந்த கோபுரமாது தனது 800 வயது சரித்திரத்தில் இப்போதுதான் முதல் முறையாக சாய்வதை முற்றிலுமாக நிறுத்தியிருக்கிறது என்று சோதனை முடிவுகள் உறுதிசெய்துள்ளன. சாய்வாக நிற்கும் உலகக் கட்டிடங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றதான பைசா கோபுரத்தை சாயாமல் நிறுத்துவதற்கு பத்து ஆண்டுகள் எடுத்திருக்கிறன. கோபுரத்துக்கு அருகில் வடக்கு பக்கத்திலிருந்து பூமியைத் தோண்டி சுமார் எழுபது தொன் மண்ணை எடுத்திருக்கிறார்கள். அப்படிச் செய்வதன் மூலம் கோபுரம் தானாக நிமிரும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். மண்ணைத் தோண்டி எடுத்ததன் பின்பு எதிர்பார்த்ததைப் போலவே கோபுரம் நிமிரத்தொடங்கியது. ஏழு வருடங்களில் சுமார் 48 செண்டிமீட்டர் நிமிர்ந்துவிட்ட நிலையில், தற்போது அந்தக் கோபுரம் முற்றிலுமாக அசைவதை நிறுத்தியுள்ளது. அதன் 800 ஆண்டுகள் சரித்திரத்தில் அது நிலையாக நின்றிருப்பது இதுவே முதல் முறை என்று கட்டிட நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Thambiluvil chat
The Srilanka And world news
Wednesday, July 23, 2008
Monday, July 21, 2008
உலகத்தை காப்பாற்றுவதற்கு 100 மாதங்கள் மட்டுமே அவகாசம்
இதன் பிரகாரம் கால நிலை மாற்றம், எரிபொருள் மற்றும் நிதி போன்ற தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு புதிய உடன்படிக்கையொன்று ஏற்படுத்திக் கொள்ளப்படுவது அவசியГ¶மன "கிறீன் நியூ டீல்' குழு என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இவ்வமைப்பால் வெளியிடப்பட்ட அறிக்கையில் புதுப்பிக்கக் கூடிய சக்தி வளங்கள் மீதான பிரதான முதலீடு, சுற்றுச் சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான ஆயிரக்கணக்கான தொழில் வாய்ப்புக்கள் என்பன உட்பட பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
Thursday, July 17, 2008
2008 ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக வெனிசுலாவின் டயானா மொண்டோஸா
2008 ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக வெனிசுலா நாட்டின் இருபத்து இரண்டு வயதான டயானா மொண்டோஸா
தெரிவு செய்யபட்டுள்ளார்
பாடல்கள் நிறைந்த "மம்மா மியா' பிரித்தானிய திரையுலகில் வசூல் சாதனை
மெரில் ஸ்றீப், பியர்ஸ் பிரொஸ்னன் மற்றும் கொலின் பிர்க் ஆகியோரின் நடிப்பில் உருவான இத்திரைப்படம், வீரசாகச "ஹான்கொக்' திரைப்படத்தை இரண்டாமிடத்திற்கு தள்ளியுள்ளது. "ஹான்கொக்' திரைப்படத்தின் வருமானம் 3.6 மில்லியன் ஸ்ரேலிங் பவுனாகும்.
அதேசமயம் "குங் பு பண்டா' 2.8 மில்லியன் ஸ்ரேலிங் பவுனையும் "பிரின்ஸ் கஸ்பியன்' 934,561 ஸ்ரேலிங் பவுனையும் "போர்பிடின் கிங்டம்' 824, 586 ஸ்ரேலிங் பவுனையும் வருமானமாக ஈட்டி முறையே வசூலில் 3 ஆம், 4 ஆம், 5 ஆம் இடங்களைப் பெற்றுள்ளன.
Monday, July 7, 2008
ஆசிய கோப்பை: இலங்கை அணி மீண்டும் சாம்பியன்
மீண்டும் ஒரு முறை இறுதிப் போட்டி வரை வந்து கோப்பையைக் கோட்டை விட்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. நேற்று கராச்சியில் நடந்த ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோற்றது இந்திய அணி. இந்தியாவை நான்காவது முறை ஆசியக் கோப்பை இறுதியில் இலங்கை அணி தோற்கடித்துள்ளது. இந்திய அணியின் 6 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை இலங்கை தக்க வைத்துக் கொள்ள உதவினார் சுழற்பந்து வீச்சாளர் மெண்டிஸ். டாஸில் வென்ற இந்திய கேப்டன் டோணி முதலில் இலங்கையை பேட் செய்யச் சொன்னார். ஜெயசூர்யாவும், சங்கர்க்கராவும் இலங்கையின் இன்னிங்ஸைத் துவக்கினர். இரண்டாவது ஓவரில் சங்கர்க்கரா ரன் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்தவர்களும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். ஆனால் ஜெயசூர்யா மட்டும் அசரவில்லை. வெளுத்துக் கட்டினார். 56 ரன்களை அவர் எடுத்திருந்தபோது, ஒரு கடினமான கேட்சை கோட்டை விட்டார் ஆர்பி சிங். அதன் விளைவு, அவரது அடுத்த ஓவரிலேயே 3 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் என விளாசித் தள்ளினார் ஜெயசூர்யா. 76 பந்துகளில் தனது 27-வது சத்த்தைப் பூர்த்தி செய்தார் ஜெயசூர்யா.
ஆனால் அதன்பிறகு அவரால் அதே பாணியில் ஆட முடியவில்லை. களைத்துப் போன ஜெயசூர்யா, 125 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஷேவாக் பந்தில் இஷாந்துக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரையடுத்து தில்ஷன் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த இருவரும்தான் இலங்கை அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவினர்.
டெய்ல் எண்டர்ஸ் எனப்படும் வாஸ் மற்றும் குலசேகரா இருவரும் அதிரடியாக 60 ரன்களுக்கு மேல் குவித்தனர்.
இந்தியத் தரப்பில் ஆர்பிசிங், இஷாந்த் சர்மா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பதான் இரு விக்கெட்களை வீழ்த்தினார்.
மிரட்டலான துவக்கம்
இந்திய அணியின் துவக்கம் மிரட்டலாக இருந்த்து. ஷேவாக்கின் ஆட்டம் அதிரடியாய் அமைந்த்து. வெறும் 26 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் ஷேவாக். ஆனால் மறுமுனையிமல் கம்பீர் 6 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அஜந்தா மெண்டிஸ் பந்து வீச்சைத் துவக்கியதுமே ஆட்டத்தின் போக்கு அடியோடு மாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகதளைப் பறிகொடுத்த இந்திய அணி, 50 ஓவர்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் 39.3 வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி மீண்டும் ஆசியக் கோப்பை சாம்பியனானது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகள் அஜந்தா மெண்டிஸூக்கு வழங்கப்பட்டன.
இந்திய அணி 4 முறை ஆசியக் கோப்பையை வென்றுள்ளது. ஆனால் அதெல்லாம் பதிமூன்று வருடங்களுக்கு முந்தைய கதை. அதன்பிறகு தொடர்ந்து இலங்கை, பாகிஸ்தான் அணிகள்தான் இந்தக் கோப்பையை வென்று வருகின்றன.
கடந்த 10 ஆண்டுகளாக இலங்கைக்கு எதிரான ஒரு இறுதிப் போட்டியில் கூட இந்தியா வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to:
Posts (Atom)