Thambiluvil chat

The Srilanka And world news

Wednesday, July 23, 2008

பைசா சாயும் கோபுரம் நிமிர்கிறது:

pisa.jpg

உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கிய பைசா நகர சாய்ந்த கோபுரம் ஒரேயடியாக சாய்ந்து விழுந்துவிடாமல் தடுப்பதற்காக நான்கு கோடி டாலர்கள் செலவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டம் பலனளித்துள்ளதா என்பதைத் தீர்மானிப்பதற்காக தற்போது சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.  சாய்ந்த கோபுரமாது தனது 800 வயது சரித்திரத்தில் இப்போதுதான் முதல் முறையாக சாய்வதை முற்றிலுமாக நிறுத்தியிருக்கிறது என்று சோதனை முடிவுகள் உறுதிசெய்துள்ளன. சாய்வாக நிற்கும் உலகக் கட்டிடங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றதான பைசா கோபுரத்தை சாயாமல் நிறுத்துவதற்கு பத்து ஆண்டுகள் எடுத்திருக்கிறன. கோபுரத்துக்கு அருகில் வடக்கு பக்கத்திலிருந்து பூமியைத் தோண்டி சுமார் எழுபது தொன் மண்ணை எடுத்திருக்கிறார்கள். அப்படிச் செய்வதன் மூலம் கோபுரம் தானாக நிமிரும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். மண்ணைத் தோண்டி எடுத்ததன் பின்பு எதிர்பார்த்ததைப் போலவே கோபுரம் நிமிரத்தொடங்கியது. ஏழு வருடங்களில் சுமார் 48 செண்டிமீட்டர் நிமிர்ந்துவிட்ட நிலையில், தற்போது அந்தக் கோபுரம் முற்றிலுமாக அசைவதை நிறுத்தியுள்ளது. அதன் 800 ஆண்டுகள் சரித்திரத்தில் அது நிலையாக நின்றிருப்பது இதுவே முதல் முறை என்று கட்டிட நிபுணர்கள் கூறியுள்ளனர்.

No comments:

site statistics