Thambiluvil chat

The Srilanka And world news

Thursday, June 26, 2008

டைடானிக் மேலங்கியொன்று ஏலத்தில் 68,500 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகியுள்ளது




ஆம் ஆண்டு மூழ்கிய "டைட்டானிக்' கப்பலிலிருந்த உயிர் காப்பு மேலங்கியொன்று, நியூயோர்க்கின் கிரிஸ்ரி ஏல விற்பனை நிலையத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஏலத்தில் 68,500 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகியுள்ளது. மேற்படி கப்பலிலிருந்த பெட்டியொன்றில் இருந்து மீட்கப்பட்ட 6 உயிர் காப்பு மேலங்கிகளில் இந்த மேலங்கியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

கூகிளும் அதன் வரலாற்றுப் பாதையும் ஒருப் பார்வை

இன்றைய இணைய உலகிள் கூகிள் நமக்குத் தரும் சேவைகளோ ஏராளம் ஏராளம்.எனவே இந்த கூகிள் நிறுவனத்தையும் அதன் வரலாற்றையும் ஒரு சிறிய பார்வையிடுவோம்.கலிபோர்னியா Stanford University இசுடான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ஜி பிரின் (Sergy Brin) லெரி பேஜ் (Larry Page) எனும் இரண்டு கலாநிதிப் பட்டப்படிப்பு மாணவர்கள் தமக்கு வழங்கப்பட்ட ஒரு ஆராய்ச்சிக்காக தொடங்கிய ஒரு முயற்சியே கூகிள் எனும் தேடு இயந்திரம் தோன்றுவதற்கான காரணமானது எனலாம்.இது இசுடான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆராச்சிக்கான விடயமாக மட்டும் இருந்தப்போதிலும். பிறகு சேர்ஜி பிரின் மற்றும் லெரி பேஜ் இருவரும் இந்த ஆய்வை, ஒரு தேடு இயந்திரத்திற்கான ஆய்வாக முன்னெடுத்தனர்.தேடும் ஒரு சொல் அல்லது விடயம் எந்தெந்த இணைய பக்கங்களிலிருந்தாலும் அதை அலசி ஆராய்ந்து நமது தேடலுக்குறிய பக்கங்களை தேடுபதிலாக பட்டியலிடும் தொழில் நுட்ப முறையை சிறந்ததாக இவர்கள் கருதினர்.இது இவர்களின் இசுடான்போர்ட் பல்கலைக்கழகத்தின் தமது பட்டப்படிப்பிற்கான ஆராய்ச்சியாக மட்டும் இருந்தப்போதிலும் தமது ஆராய்ச்சியின் பயனாக, இசுடான் போர்ட் பல்கலைக்கழகத்தின் பக்கங்களை தேடுவதற்கான ஒரு தேடு இயந்திரமாக "google.standford.edu" எனும் (டொமைன்) பெயரில் பாவனைக்கும் உற்படுத்தப்பட்டது.ஆனால் 1998 ஆகஸ்ட் மாதம் இவர்கள் தமது நன்பர் ஒருவரது வீட்டு கார் நிறுத்தகத்தில் அதிகாரபூர்வமாக கூகிள் நிறுவனத்தை வர்த்தக நோக்குடன் ஆரம்பித்தனர். அதே மாதம் 1998 ஆகஸ்ட் 15 ம் திகதியே http://www.google.com/ என பதிவுசெய்யப்பட்டது.இவர்களின் இந்த புதிய நிறுவனத்திற்கு முதலீடு செய்ய பலரை அணுகி இறுதியில் ஒருவாறு 1.1 மில்லியன் டொலர்களை தேடிக்கொண்டு கூகிள் தனது செவையை தொடர்ந்தது.கார் நிறுத்தகத்திலிருந்த இந்த நிறுவனம் 1999 மார்ச் மாதம் Silicon Valley எனும் இடத்திற்கு இடமாற்றப்பட்டது.இந்நிறுவனத்தின் அபார வளர்ச்சியாலும் இடப்பற்றாக்குறையினாலும் இவர்களது இந்த நிறுவனத்தை வேறு ஒரு பெரிய கட்டிடத்திற்கு மாற்ற வேண்டிய தேவையேற்பட்டது. எனவே 2003 ம் ஆண்டு வேறு ஒரு கட்டிடத்தை வாடகைக்குப் பெற்றனர். அந்த கட்டிடத்திற்கு Googleplex என்று பெயரிட்டனர்.2006 ம் ஆண்டு அதே கட்டிடத்தை 319 மில்லியன் டொலர்களுக்கு கூகிள் நிறுவனம் விலைக்கு வாங்கிக்கொண்டது.கூகிளின் தேடு இயந்திர தொழில் நுட்பம் 2001 செப்டம்பரில் காப்புரிமை செய்யப்பட்டது. அத்துடன் இசுடான்போர்ட் பல்கலைக்கழகத்திலும் அதிகாரபூர்வ காப்புரிமையிலும் பட்டியலிடப்பட்டது.2004 ஆகஸ்ட் 19 ம் திகதி கூகிள் இந்நிறுவனத்தை ஒரு பொது நிறுவனமாக பதிவு செய்துக்கொண்டது.கூகிள் தமது தேடு இயந்திரத்தினூடாக புதியபுதிய மாற்றங்களைச் செய்து இணைய பாவனையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 2000 ம் ஆண்டிலிருந்து தேடு இயந்திரத்தில் தேடப்படும் சொல் அல்லது விடயம் தொடர்பான தேடுபதில்களுடன் விளம்பரங்களையும் இணைத்து அதனூடாகவும் வருமானத்தை ஈட்டியது.2007 செப்டம்பர் 30 ம் திகதி கணக்கெடுப்பின் படி இந்த நிறுவனத்தின் முழுநேர பணியாளர்களாக 15, 916 இருப்பதாக கணக்கிடப்பட்டது.NASDAQ இல் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனங்களில் கூகிளே பெரியதாகும்.லெரி பேஜ் , சேர்ஜி பிரின் ஆகிய இவர்களால் உருவாக்கப்பட்ட கூகிள் NASDAQ பங்குச்சந்தையில் 2004 ஓகஸ்ட் 19 ம்திகதி 1.67 பில்லியன் டொலர்களுக்கு பங்குகள் விற்பனையாகின. அத்துடன் 23 பில்லியன் டொலர்களுக்கும் மேலாக கூகிள் நிறுவனம் மதிப்பாகியிருந்ததும் கூறிப்பிடத்தக்கது.இன்று பல நூற்றுக்கணக்கான தேடு இயந்திரங்கள் தோன்றியுள்ளப்போதும் 87% வீதமானோர் கூகிள் தேடு இயந்திரத்தையே பாவிக்கப்படுவதாக கணிப்புகள் குறிப்பிடுகின்றன.Googol எனும் பெயரே எழுத்துப்பிளையாக தட்டச்சு செய்யப்பட்டதால் Google என்று இடப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. Googol என்றால் 1 ன்றுடன் 100 பூச்சியங்களை இணைத்தால் வரும் என்னிக்கையை குறிக்கும் சொல்லாகும்.எப்படியோ Googol எனும் வார்த்தை Google என்று தவராக தட்டச்சப்பட்டது என்றாலும், Google எனும் ஒரு வார்த்தைக்கு இன்று உலகளவில் எல்லா மொழியிலுமே பயன்படும் ஒரு சொல்லாகிவிட்டது.இந்தச் சொல்லை 2006 ல் ஒக்ஸ்போர்ட் அகராதியிலும் ஒரு சொல்லாக புகுத்தப்பட்டுள்ளது. “கூகிள்” எனும் வார்த்தைக்கான அர்த்தமாக "இணையத்தில் தகவல்களை தேடுவதற்கான ஒரு தொழில் நுட்பச் சொல்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.எப்படியோ இன்று இணையத்தில் நூற்றுக்கணக்கான தேடு இயந்திரங்கள் தோன்றியுள்ளப் போதும் எல்லோருடைய மனதிலும் நின்றுவிட்ட ஒரு ஈடு இணையற்ற தேடு இயந்திரம் “கூகிள்” எனும் நிலை ஆகிவிட்டது. ஒரு நாளைக்கு பல பில்லியன் கணக்கான வார்த்தைகளை கண்னிமைக்கும் நேரத்தில் தேடித்தரும் ஒரு தேடு இயந்திரமாக வளர்ந்து நிற்கிறது.அத்துடன் நின்றுவிடாது படிப்படியாக தொடர்ந்த கூகிளின் செயல்திட்டங்கள் புதிய பொருட்களின் வடிவமைப்பு, மற்றைய நிறுவனங்களை கொள்முதல் செய்தல், பங்குதாரர்கள், விளம்பரங்கள், வியாபார யுக்திகள் என இனையத்தில் பலத்துறைகளிலும் புகுந்து விளையாடுகிறது."Don't be evil" எனும் வார்த்தையை தமது சுலோக வார்த்தையாக பாவித்துவரும் கூகிள் நிறுவனம் பேயாகாமல், மற்ற எல்லா இணையத் தொழில் நுட்பத்தையும் (கடந்து + உள்) கடவுளாக பல நன்மைகளையும் பயன்களையும் அள்ளி வழங்கிக்கொண்டிருக்கின்றது.இந்த கூகிள் கடவுள் நமக்கு அள்ளி வழங்கும் சேவைகள் ஒன்றா? இரண்டா? "கூகிளும் அது தரும் பயன்களும்" எனும் எனது அடுத்த பதிவில் அவற்றை பார்க்கலாம்

Tuesday, June 24, 2008

சுவாமி தந்திரதேவா மகராஜ் காலமானார்

அமெரிக்க நாட்டு இந்து மதத் துறவியும் அகில இலங்கை இந்து சமய அபிவிருத்திச் சபைத் தலைவருமான ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜ் இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு அவருடைய 58 ஆவது வயதில் இறைபதம் அடைந்தார்.
கடந்த சில தினங்களாக திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெறறு வந்த அவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இயற்கை எய்தியுள்ளார். Lawrence Anthony Schafaka என்ற இயற்பெயர் கொண்ட அவர் 1950 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் திகதி பென்சில்வேனியாவில் பிறந்தார். 20 வயதில் இந்து மதத்தில் நாட்டம் கொண்டு இந்தியா சென்று இந்து சமயத்தைத் தழுவி தமிழையும் சமஸ்கிருதத்தையும் கற்று தந்திரதேவா என்னும் துறவிப் பெயர் பூண்டு இந்து மத துறவியானார்.
பின்னர் இலங்கை வந்த இவர் 1983 ஆம் ஆண்டில் பாடல் பெற்ற தலைமான திருகோணமலையில் உவர் மலையில் ஆசிரமம் அமைத்து அங்கு நிரந்தரமாக தங்கினார். இலங்கை உட்பட 23 நாடுகளில் இந்து சமயப் பணிகளிலும் பிரசாரங்களிலும் ஈடுபட்டதுடன் ஆன்மீக சொற்பொழிவுகளையும் ஆற்றி வந்தார்.
பசுவதைக்கு எதிராகவும் எம்மதமும் சம்மதம் என்ற கொள்கைக்கும் எதிரானவரான சுவாமி நாட்டின் பல பகுதிகளிலும் அனாதை இல்லங்களை அமைத்து அவற்றை பராமரிப்பதற்கு உதவிகளை வழங்கி வந்துள்ளார். அத்துடன் ஆலயத் திருப்பணிகளுக்கும் விதவைகளுக்கும் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும் வறிய மாணவர்களுக்கும் வேண்டிய உதவிகளை நல்கியுள்ளார்.
அத்துடன் ஞானகோசம் உட்பட பல நூல்களையும் துண்டுப் பிரசுரங்களையும் கை நூல்களையும் ஆக்கிய பெருமை சுவாமிகளைச்ய சாரும். எண்ணம் சொல் செயல் ஆகிய மூன்று செயற்பாடுகளினாலும் இந்து ஒருவன் உண்மையான இந்துவாக வாழ வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டியவர் அவர். இறக்கும் வரை அவர் பாதரட்சை அணிந்ததில்லை. தொலைக்காட்சி பார்ப்பதையும் வானொலி கேட்பதையும் அவர் தவிர்த்து வந்தார்.
News from - thisanthan
எமது நன்றிகள் thisanthan.....

Friday, June 20, 2008

போர்ச்சுகலை வென்றது ஜெர்மனி-அரை இறுதிக்கு தகுதி!


பாசல்: ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியின் முதல் காலிறுதிப் போட்டியில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தி அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது ஜெர்மனி.ஐரோப்பிய கால்பந்து திருவிழா முக்கிய கட்டத்தை நெருங்கியுள்ளது. காலிறுதிப் போட்டிகள் தொடங்கியுள்ளன. பாசல் நகரில் நடந்த முதலாவது காலிறுதிப் போட்டியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த போர்ச்சுகல் அணியும், வலுவான ஜெர்மனியும் சந்தித்தன.மிகவும் விறுவிறுப்பாக இருந்த இந்தப் போட்டியில் இரு அணிகளும் அபாரமாக ஆடின. இரு அணிகளும் மாறி மாறி கோல் போட்டதால், வெற்றி யாருக்கு என்பதில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டமும், சிறப்பான ஆட்டமும் ஜெர்மனிக்கு துணை நிற்க அந்த அணி போர்ச்சுகலை வீழ்த்தியது.முதல் பாதி ஆட்டத்தில் போர்ச்சுகலின்ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. இருப்பினும் போர்ச்சுகலின் அரண்களைத் தடுத்து ஜெர்மனி சிறப்பாக ஆடியது.ஜெர்மனி அணிக்கான முதல் கோலை பாஸ்டியன் ஸ்வென்ஸ்டீகர் போட்டார். இவர் சமீபத்தில்தான் தடை விதிக்கப்பட்டு பின்னர் அது நீக்கப்பட்டு அணியில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் இந்த கோலைப் போட்டார் பாஸ்டியன்.அடுத்த கோலை மிரஸ்லோவ் குளோஸ் போட்டு ஜெர்மனிக்கு முன்னிலை தேடித் தந்தார்.ஹாப்டைமின்போது போர்ச்சுக்கலுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அந்த அணியின் நுனோ கோமஸ் ஒரு கோலைப் போட்டு அணிக்கு தைரியத்தை ஏற்படுத்தினார்.ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு மீண்டும் கோல் கிடைத்தது. கேப்டன் மைக்கேல் பாலக், பாஸ்டியனிடமிருந்து வந்த பந்தை கோல் போஸ்ட்டுக்குள் தள்ளி 3வது கோலைப் போட்டார்.ஆனால் 87வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ஹெல்டர் போஸ்டிகா ஒரு கோலை அடித்ததால் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. 3-2 என்ற கணக்கில் ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது. இருப்பினும் அதன் பின்னர் போர்ச்சுகல் கோல்அடிக்காமல் ஜெர்மனி வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில், 3-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வென்று அரை இறுதிக்கு முன்னேறியது.இந்த வெற்றியின் மூலம் நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது ஜெர்மனி.ஆட்ட நாயகனாக பாஸ்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இன்று குரோஷியாவும், துருக்கியும் 2வது காலிறுதிப் போட்டியில் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியுடன் ஜெர்மனி அரை இறுதிப் போட்டியில் சந்திக்கும்

Wednesday, June 11, 2008

உலகின் முதலாவது தேவாலயம் கண்டுபிடிப்பு


ஜோர்தானில் 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு நிர்மாணிக்கப்பட்ட உலகின் முதலாவது தேவாலயத்தை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ""வட ஜோர்தானில் சிரிய எல்லைப் பகுதியில் புதையுண்டநிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இத் தேவாலயமானது ஆரம்பகால கிறிஸ்தவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது என நம்புவதாக ஜோர்தானின் நிஹாப் அகழ்வாராய்ச்சி நிலையத்தின் தலைவர் அப்துல் காதர் ஹுசைன் தெரிவித்தார்.

உலகின் மிகச் சிறந்த நகராக டென்மார்க் தலைநகர் தெரிவு




உலகில் மக்கள் வாழ்வதற்கு உகந்த மிகச் சிறந்த நகரமாக டென்மார்க் தலைநகர் சொபென்ஹஜன் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

உயர்மட்ட வாழ்க்கை முறை, உன்னத கட்டமைப்பு,சிறந்த போக்குவரத்து வசதிகள், உணவகங்கள் சுற்றுச் சூழல் அனுகூல நிலை என்பன போன்ற அம்சங்களைக் கருத்திற்கொண்டே டென்மார்க் தலைநகர் சிறந்த நகரமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம் உலகப் பிரபல நகரங்களான லண்டன் மற்றும் நியூயோர்க் என்பன மிகச் சிறந்த நகரங்கள் வரிசையில் முதல் 20 இடங்களுக்குள் இடம்பெறத் தவறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் உலகின் மிகச் சிறந்த நகரங்கள் வரிசையில் இரண்டாவது முதல் ஐந்தாவது வரையான இடங்களை முறையே முனிச்,டோக்கியோ, சூரிச், ஹெல்ஸின்கி ஆகிய நகர்கள் பெற்றுள்ளன. அதேசமயம் பாரிஸ் முதல் 10 மிகச் சிறந்த இடங்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளது

Saturday, June 7, 2008

மொரட்டுவ கட்டுபெத்தையில் குண்டு வெடிப்பு, 20 பேர் உயிரிழப்பு, 60க்கு மேற்பட்டோர் காயம்.

மொரட்டுவ கட்டுபெத்தையில் குண்டு வெடிப்பு, 20 பேர் உயிரிழப்பு, 60க்கு மேற்பட்டோர் காயம்.
மொரட்டுவ கட்டுப்பெத்த சுவர்ண சைல பிம்பாரமைய விகாரைக்கு அருகில் இன்று காலை 7.30 அளவில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தாய்வானில் புகைப் பிடிக்கும் பழக்கத்துக்கு 4 வயதுச் சிறுவன் அடிமையாம்



- தாய்வான் நாட்டில் உள்ள காவோஷியாங் நகரை சேர்ந்த 4 வயது சிறுவன் ஒருவன்,புகைப் பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளதாக தெரிய வருகிறது.இந்த சிறுவன் தன் தந்தை வைத்திருக்கும் சிகரெட்டுகளை திருடி புகைப்பதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும்,புகைப் பிடிக்கும்போது என் தந்தை நல்ல குஸியாக இருப்பார்.இதை பார்த்து தான் நானும் புகை பிடிக்க தொடங்கினேன் என குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முதலில் தந்தையிடம் இருந்து திருடியவன்,பின்பு அண்ணனிடம் சிகரெட்டுகளை கடன் வாங்கத் தொடங்கியதாகவும்,அண்ணனுக்கு வயது 9.அவனும் தந்தையிடம் திருடுவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாகவும்,அண்ணனும்,தம்பியும் புகைப் பிடிப்பதை ஒருநாள் பார்த்த தந்தை,உடனே அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாகவும் மேலும் தெரிவரும் அதேவேளை,அங்கு அவர்களுக்கு புகைபிடிப்பதை கைவிடுவதற்கான சிகிச்சை அளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹாரி பாட்டர் கதைகளை எழுதிய ஜே.கே.ரவுலிங்குக்கு சவால் விடும் 19 வயது பெண்


இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங். இவர் எழுதிய ஹாரிபாட்டார் கதைகள் இவருக்கு பெயரையும், புகழையும் கொடுத்ததோடு, கோடி கோடியாக பணத்தையும் குவித்தது. உலகக் கோடீஸ்வரர் பட்டியலில் அவர் பெயரையும் சேர்த்தது. இப்போது இங்கிலாந்தில் புதிய எழுத்தாளர் ஒருவர் உருவாகி இருக்கிறார். அவர் பெயர் கேதரைன் பானர். இவருக்கு இப்போது 19 வயதாகிறது. 14 வயது முதலே கதைகள் எழுதி வருகிறார். மாயாஜால உலகில் வாழும் டீனேஜர் லியோ நார்த் என்னும் இளைஞரை மையமாக வைத்து கதைகளை எழுதி வருகிறார். லியோ நார்த் கையில் எழுதப்படாத புத்தகம் கிடைக்கிறது. இந்த புத்தகம் அவரை அதிசய உலகத்துக்கு அழைத்துச்செல்கிறது. இப்படி செல்கிறது கதை. இந்த கதைகள் ஹாரி பாட்டர் கதைகளை போல பிரபலம் அடையும் என்று புத்தக பதிப்பாளர்கள் நம்புகிறார்கள்

Wednesday, June 4, 2008

சர்வதேச விண்வெளி நிலையத்துடன் ஜப்பானிய ஆய்வு கூடம் இணைப்பு



சர்வதேச விண்வெளி நிலையத்துடன் ஜப்பானிய ஆய்வு கூடம் இணைப்பு
வீரகேசரி இணையம் 6/4/2008 10:03:11 PM - டிஸ்கவரி விண்கலம் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஜப்பானிய ஆய்வுகூடமானது சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது. 16 தொன் எடையுடைய இந்த "கிபோ' ஆய்வு கூடமானது, உயிரியல் மருத்துவம் மற்றும் பௌதீக விஞ்ஞானங்கள் தொடர்பான ஆய்வுக்காக பயன்படுத்தப்படவுள்ளது. இந்த ஆய்வு கூடத்தை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணைக்கும் பணியில் விண்வெளி வீரர்களான அகிஹிகோ ஹொஷிடே மற்றும் கரென் நைபேர்க் ஆகியோர் ஈடுபட்டனர். சர்வதேச விண்வெளி நிலையத்தின் இயந்திரக் கரத்தை பயன்படுத்தி சுமார் 6 மணித்தியாலங்கள் அந்தரத்தில் சஞ்சரித்து மேற்படி ஆய்வு கூடத்தை இவ் விண்வெளி வீரர்கள் பொருத்தியுள்ளனர். அத்துடன் இரு வாரங்களுக்கு முன் பழுதடைந்த சர்வதேச விண்வெளி நிலையத்தின் மலசலகூடத்தை திருத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் டிஸ்கவரி விண்கலமானது எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை பூமிக்குத் திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது
site statistics