பாசல்: ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியின் முதல் காலிறுதிப் போட்டியில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தி அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது ஜெர்மனி.ஐரோப்பிய கால்பந்து திருவிழா முக்கிய கட்டத்தை நெருங்கியுள்ளது. காலிறுதிப் போட்டிகள் தொடங்கியுள்ளன. பாசல் நகரில் நடந்த முதலாவது காலிறுதிப் போட்டியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த போர்ச்சுகல் அணியும், வலுவான ஜெர்மனியும் சந்தித்தன.மிகவும் விறுவிறுப்பாக இருந்த இந்தப் போட்டியில் இரு அணிகளும் அபாரமாக ஆடின. இரு அணிகளும் மாறி மாறி கோல் போட்டதால், வெற்றி யாருக்கு என்பதில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டமும், சிறப்பான ஆட்டமும் ஜெர்மனிக்கு துணை நிற்க அந்த அணி போர்ச்சுகலை வீழ்த்தியது.முதல் பாதி ஆட்டத்தில் போர்ச்சுகலின்ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. இருப்பினும் போர்ச்சுகலின் அரண்களைத் தடுத்து ஜெர்மனி சிறப்பாக ஆடியது.ஜெர்மனி அணிக்கான முதல் கோலை பாஸ்டியன் ஸ்வென்ஸ்டீகர் போட்டார். இவர் சமீபத்தில்தான் தடை விதிக்கப்பட்டு பின்னர் அது நீக்கப்பட்டு அணியில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் இந்த கோலைப் போட்டார் பாஸ்டியன்.அடுத்த கோலை மிரஸ்லோவ் குளோஸ் போட்டு ஜெர்மனிக்கு முன்னிலை தேடித் தந்தார்.ஹாப்டைமின்போது போர்ச்சுக்கலுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அந்த அணியின் நுனோ கோமஸ் ஒரு கோலைப் போட்டு அணிக்கு தைரியத்தை ஏற்படுத்தினார்.ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு மீண்டும் கோல் கிடைத்தது. கேப்டன் மைக்கேல் பாலக், பாஸ்டியனிடமிருந்து வந்த பந்தை கோல் போஸ்ட்டுக்குள் தள்ளி 3வது கோலைப் போட்டார்.ஆனால் 87வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ஹெல்டர் போஸ்டிகா ஒரு கோலை அடித்ததால் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. 3-2 என்ற கணக்கில் ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது. இருப்பினும் அதன் பின்னர் போர்ச்சுகல் கோல்அடிக்காமல் ஜெர்மனி வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில், 3-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வென்று அரை இறுதிக்கு முன்னேறியது.இந்த வெற்றியின் மூலம் நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது ஜெர்மனி.ஆட்ட நாயகனாக பாஸ்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இன்று குரோஷியாவும், துருக்கியும் 2வது காலிறுதிப் போட்டியில் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியுடன் ஜெர்மனி அரை இறுதிப் போட்டியில் சந்திக்கும்
Thambiluvil chat
The Srilanka And world news
Friday, June 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment