சர்வதேச விண்வெளி நிலையத்துடன் ஜப்பானிய ஆய்வு கூடம் இணைப்பு
வீரகேசரி இணையம் 6/4/2008 10:03:11 PM - டிஸ்கவரி விண்கலம் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஜப்பானிய ஆய்வுகூடமானது சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது. 16 தொன் எடையுடைய இந்த "கிபோ' ஆய்வு கூடமானது, உயிரியல் மருத்துவம் மற்றும் பௌதீக விஞ்ஞானங்கள் தொடர்பான ஆய்வுக்காக பயன்படுத்தப்படவுள்ளது. இந்த ஆய்வு கூடத்தை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணைக்கும் பணியில் விண்வெளி வீரர்களான அகிஹிகோ ஹொஷிடே மற்றும் கரென் நைபேர்க் ஆகியோர் ஈடுபட்டனர். சர்வதேச விண்வெளி நிலையத்தின் இயந்திரக் கரத்தை பயன்படுத்தி சுமார் 6 மணித்தியாலங்கள் அந்தரத்தில் சஞ்சரித்து மேற்படி ஆய்வு கூடத்தை இவ் விண்வெளி வீரர்கள் பொருத்தியுள்ளனர். அத்துடன் இரு வாரங்களுக்கு முன் பழுதடைந்த சர்வதேச விண்வெளி நிலையத்தின் மலசலகூடத்தை திருத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் டிஸ்கவரி விண்கலமானது எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை பூமிக்குத் திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது
No comments:
Post a Comment