இன்றைய இணைய உலகிள் கூகிள் நமக்குத் தரும் சேவைகளோ ஏராளம் ஏராளம்.எனவே இந்த கூகிள் நிறுவனத்தையும் அதன் வரலாற்றையும் ஒரு சிறிய பார்வையிடுவோம்.கலிபோர்னியா Stanford University இசுடான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ஜி பிரின் (Sergy Brin) லெரி பேஜ் (Larry Page) எனும் இரண்டு கலாநிதிப் பட்டப்படிப்பு மாணவர்கள் தமக்கு வழங்கப்பட்ட ஒரு ஆராய்ச்சிக்காக தொடங்கிய ஒரு முயற்சியே கூகிள் எனும் தேடு இயந்திரம் தோன்றுவதற்கான காரணமானது எனலாம்.இது இசுடான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆராச்சிக்கான விடயமாக மட்டும் இருந்தப்போதிலும். பிறகு சேர்ஜி பிரின் மற்றும் லெரி பேஜ் இருவரும் இந்த ஆய்வை, ஒரு தேடு இயந்திரத்திற்கான ஆய்வாக முன்னெடுத்தனர்.தேடும் ஒரு சொல் அல்லது விடயம் எந்தெந்த இணைய பக்கங்களிலிருந்தாலும் அதை அலசி ஆராய்ந்து நமது தேடலுக்குறிய பக்கங்களை தேடுபதிலாக பட்டியலிடும் தொழில் நுட்ப முறையை சிறந்ததாக இவர்கள் கருதினர்.இது இவர்களின் இசுடான்போர்ட் பல்கலைக்கழகத்தின் தமது பட்டப்படிப்பிற்கான ஆராய்ச்சியாக மட்டும் இருந்தப்போதிலும் தமது ஆராய்ச்சியின் பயனாக, இசுடான் போர்ட் பல்கலைக்கழகத்தின் பக்கங்களை தேடுவதற்கான ஒரு தேடு இயந்திரமாக "google.standford.edu" எனும் (டொமைன்) பெயரில் பாவனைக்கும் உற்படுத்தப்பட்டது.ஆனால் 1998 ஆகஸ்ட் மாதம் இவர்கள் தமது நன்பர் ஒருவரது வீட்டு கார் நிறுத்தகத்தில் அதிகாரபூர்வமாக கூகிள் நிறுவனத்தை வர்த்தக நோக்குடன் ஆரம்பித்தனர். அதே மாதம் 1998 ஆகஸ்ட் 15 ம் திகதியே http://www.google.com/ என பதிவுசெய்யப்பட்டது.இவர்களின் இந்த புதிய நிறுவனத்திற்கு முதலீடு செய்ய பலரை அணுகி இறுதியில் ஒருவாறு 1.1 மில்லியன் டொலர்களை தேடிக்கொண்டு கூகிள் தனது செவையை தொடர்ந்தது.கார் நிறுத்தகத்திலிருந்த இந்த நிறுவனம் 1999 மார்ச் மாதம் Silicon Valley எனும் இடத்திற்கு இடமாற்றப்பட்டது.இந்நிறுவனத்தின் அபார வளர்ச்சியாலும் இடப்பற்றாக்குறையினாலும் இவர்களது இந்த நிறுவனத்தை வேறு ஒரு பெரிய கட்டிடத்திற்கு மாற்ற வேண்டிய தேவையேற்பட்டது. எனவே 2003 ம் ஆண்டு வேறு ஒரு கட்டிடத்தை வாடகைக்குப் பெற்றனர். அந்த கட்டிடத்திற்கு Googleplex என்று பெயரிட்டனர்.2006 ம் ஆண்டு அதே கட்டிடத்தை 319 மில்லியன் டொலர்களுக்கு கூகிள் நிறுவனம் விலைக்கு வாங்கிக்கொண்டது.கூகிளின் தேடு இயந்திர தொழில் நுட்பம் 2001 செப்டம்பரில் காப்புரிமை செய்யப்பட்டது. அத்துடன் இசுடான்போர்ட் பல்கலைக்கழகத்திலும் அதிகாரபூர்வ காப்புரிமையிலும் பட்டியலிடப்பட்டது.2004 ஆகஸ்ட் 19 ம் திகதி கூகிள் இந்நிறுவனத்தை ஒரு பொது நிறுவனமாக பதிவு செய்துக்கொண்டது.கூகிள் தமது தேடு இயந்திரத்தினூடாக புதியபுதிய மாற்றங்களைச் செய்து இணைய பாவனையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 2000 ம் ஆண்டிலிருந்து தேடு இயந்திரத்தில் தேடப்படும் சொல் அல்லது விடயம் தொடர்பான தேடுபதில்களுடன் விளம்பரங்களையும் இணைத்து அதனூடாகவும் வருமானத்தை ஈட்டியது.2007 செப்டம்பர் 30 ம் திகதி கணக்கெடுப்பின் படி இந்த நிறுவனத்தின் முழுநேர பணியாளர்களாக 15, 916 இருப்பதாக கணக்கிடப்பட்டது.NASDAQ இல் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனங்களில் கூகிளே பெரியதாகும்.லெரி பேஜ் , சேர்ஜி பிரின் ஆகிய இவர்களால் உருவாக்கப்பட்ட கூகிள் NASDAQ பங்குச்சந்தையில் 2004 ஓகஸ்ட் 19 ம்திகதி 1.67 பில்லியன் டொலர்களுக்கு பங்குகள் விற்பனையாகின. அத்துடன் 23 பில்லியன் டொலர்களுக்கும் மேலாக கூகிள் நிறுவனம் மதிப்பாகியிருந்ததும் கூறிப்பிடத்தக்கது.இன்று பல நூற்றுக்கணக்கான தேடு இயந்திரங்கள் தோன்றியுள்ளப்போதும் 87% வீதமானோர் கூகிள் தேடு இயந்திரத்தையே பாவிக்கப்படுவதாக கணிப்புகள் குறிப்பிடுகின்றன.Googol எனும் பெயரே எழுத்துப்பிளையாக தட்டச்சு செய்யப்பட்டதால் Google என்று இடப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. Googol என்றால் 1 ன்றுடன் 100 பூச்சியங்களை இணைத்தால் வரும் என்னிக்கையை குறிக்கும் சொல்லாகும்.எப்படியோ Googol எனும் வார்த்தை Google என்று தவராக தட்டச்சப்பட்டது என்றாலும், Google எனும் ஒரு வார்த்தைக்கு இன்று உலகளவில் எல்லா மொழியிலுமே பயன்படும் ஒரு சொல்லாகிவிட்டது.இந்தச் சொல்லை 2006 ல் ஒக்ஸ்போர்ட் அகராதியிலும் ஒரு சொல்லாக புகுத்தப்பட்டுள்ளது. “கூகிள்” எனும் வார்த்தைக்கான அர்த்தமாக "இணையத்தில் தகவல்களை தேடுவதற்கான ஒரு தொழில் நுட்பச் சொல்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.எப்படியோ இன்று இணையத்தில் நூற்றுக்கணக்கான தேடு இயந்திரங்கள் தோன்றியுள்ளப் போதும் எல்லோருடைய மனதிலும் நின்றுவிட்ட ஒரு ஈடு இணையற்ற தேடு இயந்திரம் “கூகிள்” எனும் நிலை ஆகிவிட்டது. ஒரு நாளைக்கு பல பில்லியன் கணக்கான வார்த்தைகளை கண்னிமைக்கும் நேரத்தில் தேடித்தரும் ஒரு தேடு இயந்திரமாக வளர்ந்து நிற்கிறது.அத்துடன் நின்றுவிடாது படிப்படியாக தொடர்ந்த கூகிளின் செயல்திட்டங்கள் புதிய பொருட்களின் வடிவமைப்பு, மற்றைய நிறுவனங்களை கொள்முதல் செய்தல், பங்குதாரர்கள், விளம்பரங்கள், வியாபார யுக்திகள் என இனையத்தில் பலத்துறைகளிலும் புகுந்து விளையாடுகிறது."Don't be evil" எனும் வார்த்தையை தமது சுலோக வார்த்தையாக பாவித்துவரும் கூகிள் நிறுவனம் பேயாகாமல், மற்ற எல்லா இணையத் தொழில் நுட்பத்தையும் (கடந்து + உள்) கடவுளாக பல நன்மைகளையும் பயன்களையும் அள்ளி வழங்கிக்கொண்டிருக்கின்றது.இந்த கூகிள் கடவுள் நமக்கு அள்ளி வழங்கும் சேவைகள் ஒன்றா? இரண்டா? "கூகிளும் அது தரும் பயன்களும்" எனும் எனது அடுத்த பதிவில் அவற்றை பார்க்கலாம்
Thambiluvil chat
The Srilanka And world news
Thursday, June 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment