Thambiluvil chat

The Srilanka And world news

Saturday, August 30, 2008

இன்னும் ஓரிரு மாதங்களில் நிலவுக்கு இந்திய விண்கலம்


இன்னும் ஓரிரு மாதங்களில் நிலவுக்கு இந்தியாவின் முதல் ஆளில்லா விண்கலம் அனுப்பப்படும்.

அக்டோபர் இறுதியில் அல்லது டிசம்பர் தொடக்கத்தில் இந்த விண்கலம் அனுப்பப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் கூறினார்.  "நிலவுக்குப் பயணம்' என்ற தலைப்பிலான புத்தகத்தை தில்லியில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டுப் பேசும்போது அவர் இத் தகவலைக் கூறினார்.
--
People Of Thambiluvil

Monday, August 25, 2008

நிறைவடைந்தது பீஜிங் ஒலிம்பிக்

கடந்த 16 நாட்களாக உலகின் கவனத்தைத் தன் பக்கம் இழுத்து வைத்திருந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள், கோலாகலமான நிறைவு விழா நிகழ்ச்சிகளுடன் ஆகஸ்டு 24 அன்று நிறைவடைந்தன.Photo: Fireworks explode

உலகின் பார்வையைத் தன் வசம் வைத்திருந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் வெற்றிகரமாக நிறைவு பெற்றன. கடைசி நாளான ஆகஸ்டு 24 அன்று தடகளம், கூடைப் பந்து, குத்துச் சண்டை, ரித்மிக் ஜின்னாஸ்டிக், கால்பந்து, வாட்டர்போலோ ஆகிய பிரிவுகளில் 12 தங்கப் பதக்கங்களுக்கான போட்டிகள் நடந்தன.

தொடக்க நிகழ்ச்சியில் 15,000 கலைஞர்கள் அற்புதமான நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டி பிரமிக்க வைத்தனர். நிறைவு விழாவில் 7,000 கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். 204 நாடுகளைச் சேர்ந்த 10,500 விளையாட்டு வீர வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள், இந்த ஆண்டு பெய்ஜிங் நகரில் நடந்தன.



--
Photos: Fireworks light up night sky

Fireworks light up night sky during the Closing Ceremony for the Beijing 2008 Olympic Games on August 24, 2008 in Beijing, China.


People Of Thambiluvil

Sunday, August 17, 2008

மகளிர் டென்னிஸ் தரவரிசையில் இவானோவிச் முதலிடம்!

உலக மகளிர் டென்னிஸ் தரவரிசையில் செர்பிய வீராங்கனை இவானோவிச் விம்பிள்டனில் தோல்வி தழுவி வெளியேறினாலும் 3828 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவரிசைபபட்டிய‌லில் முதல் 20 இடங்களில் உள்ள வீராங்கனைகள் வருமாறு:


1. அனா இவானோவிச் (செர்பியா)- 3828 புள்ளிகள்

2. ஜெலெனா ஜான்கோவிச் (செர்பியா) - 3685 புள்ளிகள்

3. மரியா ஷரபோவா (ரஷ்யா) - 3626 புள்ளிகள்

4. ஸ்வெட்லானா குஸ்னெட்சோவா (ரஷ்யா) - 3455 புள்ளிகள்

5. செரினா வில்லியம்ஸ் (அமெரிக்கா) - 3126 புள்ளிகள்

6. எலெனா டீமென்டீவா (ரஷ்யா) - 3105 புள்ளிகள்

7. வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) - 2606 புள்ளிகள்

8. அன்னா சக்வெடாட்சே (ரஷ்யா) - 2486 புள்ளிகள்

9. தினாரா சஃபினா (ரஷ்யா) - 2287 புள்ளிகள்

10. அக்னியெஸ்கா ராத்வான்ஸ்கா (போலந்து) 2141 புள்ளிகள்

11. வெரா ஸ்வொனரேவா (ரஷ்யா)- 1972 புள்ளிகள்

12.டேனியலா ஹண்டுசோவா (ஸ்லோவாகியா)- 1927 புள்ளிகள்

13. பேட்டி ஸ்னைடர் (சுவிஸ்.)- 1802 புள்ளிகள்

14. ஆக்னெஸ் ஸாவேய் (ஹங்கேரி)- 1694 புள்ளிகள்

15. மரியோன் பர்தோலி (பிரான்ஸ்)- 1420 புள்ளிகள்

16. விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்)- 1386 புள்ளிகள்

17. நாடியா பெட்ரோவா (ரஷ்யா)- 1321 புள்ளிகள்

18. அலிஸ் கார்னெட் (பிரான்ஸ்) - 1312 புள்ளிகள்

19. மரியா கிரிலென்கோ (ரஷ்யா) - 1208 புள்ளிகள்

20. பிரான்செஸ்கா ஷியாவோன் (இத்தாலி)- 1201 புள்ளிகள்

--
People Of Thambiluvil

பயஸ்-பூபதி இணைக்கு முதலாம் தரவரிசை

அமெரிக்காவில் உள்ள இண்டியானாபோலிஸில் நடைபெறும் டென்னிஸ் தொடர் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய இணையான லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி இணைக்கு முதலாம் தரவரிசை வழங்கப்பட்டுள்ளது.

பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்குக் முன்னால் இவர்கள் இருவரும் விளையாடும் கடைசி ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.


விம்பிள்டனுக்கு முந்தைய ஹாலந்து டென்னிஸ் தொடரில் இவர்கள் இணைந்து விளையாடி இரட்டையர் இறுதி போட்டியில் தோல்வி தழுவினர்.

இண்டியானாபோலீஸ் டென்னிஸ் தொடரில் இவர்கள் முதல் சுற்றில் நாளை கனடா நாட்டு இரட்டையர் இணையான டேனியல் நெஸ்டர்-ஃபிரெடெரிக் நைமேயர் இணையை எதிர்கொள்கின்றனர்.

மற்றொரு ஆடவர் இரட்டையர் இணையான போபண்ணா-குரேஷி இணை முதல் சுற்றில் ரஷ்யாவின் இரட்டையர் இணையான குனிட்சிந்டுர்சுனோவ் இணையை எதிர்கொள்கின்றனர்.

ஸ்டான்ஃபோர்டில் நடைபெறும் மற்றொரு டென்னிஸ் தொடரில் சானியா மிர்சா ஒற்றையர் முதல் சுற்றில் பிரிட்டனின் ஆன்னி கியோதவாங் என்ற வீராங்கனை எதிர் கொள்கிறார். இதில் வெற்றி பெற்றால் 2-வது சுற்றில் பிரான்ஸ் வீராங்கனை மரியோன் பர்தோலியை எதிர்கொள்வார்.

அதே போல் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா-அன்னா சக்வெடாட்சே இணை செக். இணையான ஈவா ஹிருதினோவா- விளாதிமிர் உலிரோவா இணையை முதல் சுற்றில் எதிர்கொள்கின்றனர்.

--
People Of Thambiluvil

2வது சுற்றுக்கு சானியா முன்னேற்றம்


PTI Photo FILE
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து வரும் ஈஸ்ட் வெஸ்ட் பேங்க் கிளாஸிக் டென்னிஸ் தொடரின் மகளிர் பிரிவு 2வது சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்சா முன்னேறி உள்ளார்.

இப்போட்டியின் முதல் சுற்றில் செக் குடியரசைச் சேர்ந்த இவா ஹிடினோவாவுடன் மோதிய சானியா, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

சுமார் ஒரு மணி நேரம் 7 நிமிடத்திற்குள்ளாமுடிந்த இப்போட்டியில், முதல் செட்டை 30 நிமிடங்களில் சானியா கைப்பற்றினார்.

உக்ரைன் வீராங்கனை க‌திரினா, சீன வீராங்கனை மெங் யுவான் இடையே நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுடன், சானியா 2வது சுற்றில் மோதுவார் என்பது குறிப்பிடத்தக்கது

--
People Of Thambiluvil

Saturday, August 16, 2008

ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டம்: போல்ட் உலக சாதனை!

PTI Photo FILE
பீஜிங் ஒலிம்பிக் தொடரில் உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரரை அறிமுகப்படுத்தும் 100 மீட்டர் இறுதிப் போட்டியில், ஜமைக்கா வீரர் யுசைன் போல்ட் பந்தய தூரத்தை 9.69 விநாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார்.

சற்றுமுன் (இந்திய நேரப்படி 8 மணியளவில்) நடந்து முடிந்த இப்போட்டியில், ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அசாஃபா பாவல் 5வது இடத்தையே பிடித்தார்.

100 மீட்டர் ஓட்டத்தின் இறுதிப்போட்டியில் யுசைன் போல்ட், மற்றொரு ஜமைக்கா வீரர் அசாஃபா பாவல் உள்ளிட்ட 8 பேர் பங்கேற்றனர். அமெரிக்காவின் டைசன்-கே தகுதிச்சுற்றில் பந்தய தூரத்தை 10.05 நொடிகளில் கடந்த காரணத்தால் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

போட்டி துவங்கிய 3 நொடிகளுக்கு உள்ளாகவே போல்ட் முன்னிலை பெற்றார். 6வது, 7வது நொடியில் மற்ற வீரர்களைக் காட்டிலும் போல்ட் வெகு தூரம் முன்னேறினார். தங்கத்தை வெல்வது உறுதி என்று தெரிந்தவுடன், போட்டி முடிவதற்கு முன்பாகவே தனது நெஞ்சில் கையை தட்டி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

முடிவில் 9.69 நொடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து யுசைன் போல்ட் தங்கப் பதக்கத்தை வென்றார். டிரிடினாட்-டொபாகோ நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் தாம்ஸன் (9.89 விநாடி) வெள்ளிப் பதக்கத்தையும், அமெரிக்க வீரர் வால்டர் டிக்ஸ் (9.91 விநாடி) வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச் சென்றனர்.

இப்போட்டியில் போல்ட்-க்கு கடும் சவாலாக விளங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட அசாஃபா பாவல் பந்தய தூரத்தை 9.95 நொடிகளில் கடந்து 5வது இடத்தையே பிடித்தார்.

--
People Of Thambiluvil

மைக்கேல் பெல்ப்ஸ்... ஓர் அசாத்திய வீரரின் சிறப்புகள்!

PTI Photo FILE
பீஜிங்கில் ஒலிம்பிக் போட்டியில் 5 தங்கப் பதக்கங்கள் (ஆகஸ்ட் 13ஆம் தேதி நிலவரப்படி) வென்றதன் மூலம் மொத்தம் 11 ஒலிம்பிக் தங்கங்களை வென்று உலகின் தலைசிறந்த ஒலிம்பிக் நீச்சல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள மைக்கேல் பெல்ப்ஸ் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்.

தந்தை ஃப்ரெட் காவல்துறை அதிகாரி. தாய் டெப்பி ஆசிரியை. பெல்ப்சின் மூத்த சகோதரி விட்னியும் நீச்சல் வீராங்கனை. பெல்ப்ஸுக்கு 7 வயதாக இருந்த போதே அவரது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

பயிற்சியாளர் பாப் பவ்மென், 11 வயதில் மைக்கேல் பெல்ப்ஸ்-ஐ பார்த்தார். அந்த கணமே பவ்மெனின் மனதில், பெல்பஸ் உலக சாம்பியனாக நிச்சயம் வருவார் எனத் தெரிந்து விட்டது.

இதையடுத்து அவரது பெற்றோரிடம் பேசிய பவ்மென், "பெல்ப்ஸ் மனது வைத்தால் உலகின் தலைசிறந்த நீச்சல் வீரனாக முன்னேற முடியும" என தன் மனதில் தோன்றியதை பக்குவமாக எடுத்துரைத்தார். அவர் அன்று சொன்ன வார்த்தை, ஆகஸ்ட் 13ஆம் தேதி உலகமே வியக்கும் வண்ணம் பீஜிங்கில் நிறைவேறியுள்ளது.

PTI Photo FILE
வெற்றியின் ரகசியம்: போட்டியிடும் மனப்பான்மை, மிக சிறப்பான உடல் தகுதியே பெல்ப்ஸ் சாதனையின் ரகசியம் என்று பயிற்சியாளர் பாப் பவ்மென் கூறியுள்ளார்.

உடல் தகுதி என்று பவ்மென் குறிப்பிட்டத்தை கூர்ந்து கவனித்தால் அதன் உள் அர்த்தம் புரியும். ஒரு காமிக்ஸ் புத்தகத்தில் வரையப்படும் கதாபாத்திரம் போல் செதுக்கப்பட்ட உடல், அகண்ட தோள்கள், மிகக் குள்ளமான கால்கள் உள்ளிட்ட உடல் அம்சங்கள் நீச்சலில் அவருக்கு பேருதவியாக இருந்துள்ளது.

மொத்தம் 6 அடி 4 அங்குலம் உயரமுடைய பெல்ப்ஸ்-ன் கைகள் மற்றவர்களைக் காட்டிலும் சற்றே நீளமானது என்பதால், உயரத்திற்கு ஏற்ற அளவை விட 3 அங்குலம் கூடுதலான தூரத்தை எட்டக் கூடிய சிறப்புத் தகுதியை பெல்ப்ஸ் பெற்றிருந்தார் என்பது சிலருக்கே தெரிந்த விஷயம்.

நீச்சல் போட்டிகளில் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு செல்லும் வீரர்கள் அங்கிருந்து திரும்பி வர நீருக்குள்ளேயே ஒரு குட்டிக்கரணம் அடித்து கால்களால் சுவரை உதைத்து ஒரு உந்துதலை உருவாக்கி மீண்டும் நீந்திச் செல்வர். இந்த விஷயத்திலும் பெல்ப்ஸ் சற்றே வித்தியாசமானவர்.

மற்ற நீச்சல் வீரர்களைப் போல் குட்டிக்கரணம் அடிக்கும் போது பெல்ப்ஸ் அதிக ஆழத்திற்கு செல்ல மாட்டார். நீரின் மேல்மட்டத்தில் இருப்பதால் நீரின் ஈர்ப்பு விசை மிகக் குறைவாக இருக்கும். இதன் காரணமாக மற்ற வீரர்கள் கால்களால் சுவரை உதைத்து...


--
People Of Thambiluvil

Wednesday, August 13, 2008

மைக்ரோசொப்டின் இணையத்தள தேர்வில் உலக சாதனை படைத்த 8 வயது மாணவி

  கடந்த மாதம் மைக்ரோசொப்ட் நிறுவனம் நடத்திய இணையத் தள தேர்வில் 1000க்கு 842 புள்ளிகளைப் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவர் உலக சாதனை புரிந்துள்ளார்.

கலை, கவிதை, பாட்டு, ஒவியம், கணனி போன்ற பல துறைகளில் அபரிமிதமான ஆற்றல் பெற்றவர்களுக்கு இளம் வயது சாதனையாளர் விருது வழங்கப்படுவது வழக்கம். இதனை 13 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற முடியும்.

அந்த வகையில், தனது 6ஆவது வயதில் கணனி அனிமேஷன், மல்டிமீடியா துறையில் பல்வேறு படிப்புகளை பூர்த்தி செய்துள்ள லவிணாஸ் (தற்போது 8 வயது) அகிட்பீடியா மற்றும் ரிலையன்ஸ் இணைய உலகம் நடத்திய இணையத் தள தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் கணனித் துறையில் அதி விசேட திறமை விருதும் பெற்றுள்ளார். இவர் கடந்த மாதம் மைக்ரோசொப்ட் நிறுவனம் நடத்திய இணையத் தள தேர்வில் அதிக புள்ளிகளைப் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து உலக சாதனை புரிந்துள்ளார். இதற்காக அவருக்கு எம்.சி.பி.. சான்றிதழ் வழங்கப்பட்டது.

இது குறித்து லவிணாஸ் கூறியதாவது: இது, கணனி பயிலும் மாணவர்களின் கணிக்கும் திறன், ஆங்கிலம் நுண்ணறிவுத் திறன், தொழில் நுட்பதிறன் உள்ளிட்ட பல திறமைகளை சோதிக்கும் தேர்வு ஆகும். இதற்கு 25 முதல் 30 வயதுள்ள மாணவர்கள் தோற்றுவது வழக்கம்.

முன்பு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆர்பாகரிம் ரந்தாவா என்ற சிறுமி தனது 10ஆவது வயதில் இத்தேர்வை எழுதி வெற்றி பெற்றது சாதனையாக இருந்தது. ஆனால் தற்போது நான் 8 வயதிலேயே தேர்ச்சி பெற்று உலக சாதனை புரிந்துள்ளேன் என்றார்


--
People Of Thambiluvil

Tuesday, August 12, 2008

ஒலிம்பிக்: தங்கம் வென்றார் அபினவ் பிந்த்ரா-வரலாறும் படைத்தார்


 
Abhinav Bindra
பெய்ஜிங்: ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குக் கிடைத்துள்ள ஒலிம்பிக் தங்கம் இது. மேலும் தனி நபர் ஒருவர் இந்தியாவுக்காக தங்கம் வென்றதும் இதுவே முதல் முறையாகும்.

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிய நாள் முதலே இந்தியாவுக்கு ஏற்றமும், இறக்கமும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் இன்றைய காலை இந்தியாவுக்கு தங்கமான காலையாக புலர்ந்துள்ளது. ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கத்தை தட்டி புதிய வரலாறு படைத்தார்.

தகுதிச் சுற்றில் 500 புள்ளிகள் வென்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த பிந்த்ரா, அதில் 700.5 புள்ளிகள் வென்று முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

சீனாவின் கியூனான் சூ வெள்ளி பதக்கமும், பின்லாந்தின் ஹென்றி ஹாக்கினன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

28 ஆண்டுகளுக்குப் பிறகு ...

இந்தியாவுக்கு ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் கிடைத்திருப்பது கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக இந்தியா, 1980ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் தங்கம் வென்றிருந்தது. அதன் பின்னர் இந்தியாவுக்கும், தங்கப் பதக்கத்திற்கும் வெகு தூரமாகி விட்டது.

லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதி தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் நழுவ விட்டிருந்தது.

கடந்த ஒலிம்பிக்கில் மயிரிழையில் ராஜ்யவர்த்தன் ரத்தோர் தவற விட்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். இவரும் துப்பாக்கி சுடுதல் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில், 28 ஆண்டு கால தங்கப் பதக்க வறட்சிக்கு இந்தியா தற்போது முற்றுப்புள்ளி வைத்து விட்டது.

முதல் வீரர்:

மேலும், ஒலிம்பிக் போட்டியில் தனி நபர் வீரர் யாரும் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றதில்லை. அந்த வகையில் பிந்த்ரா புதிய வரலாற்றையும் படைத்துள்ளார்.

ஹரியாணா, மகாராஷ்டிரம், ம.பி. பரிசு:

தங்கம் வென்றுள்ள பிந்த்ராவுக்கு ஹரியாணா அரசு ரூ. 25 லட்சமும், மகாராஷ்டிர அரசு ரூ. 10 லட்சமும் பரிசு அறிவித்துள்ளன. அதே போல மத்திய பிரதேச அரசும் ரூ. 5 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.

சட்டீஸ்கர் முதல்வர் ரமன் சிங், பிந்த்ராவுக்கு ரூ. 1 லட்சம் பரிசளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி பிரதமர், சோனியா வாழ்த்து:

தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அடக்கமான பிந்த்ரா:

தங்கப் பதக்கம் வென்றது குறித்து பிந்த்ரா கூறுகையில், இது எனக்குக் கிடைத்த வெற்றியல்ல, இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி. இந்த விருதை என் பெற்றோர், குடும்பம், பயிற்சியாளர்களுக்கு சமர்பிக்கிறேன் என்று அடக்கத்துடன் கூறினார்.

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடி கூறுகையில், இந்திய வரலாற்றில் இது மிகவும் முக்கியமான நாள். பிந்த்ராவின் வெற்றியால் இந்தியாவுக்கே பெருமை கிடைத்து விட்டது என்றார்.

பிந்த்ரா சாதனை படைத்த அதே நேரத்தில் இந்தியாவின் இன்னொரு வீரரான ககன் நரங் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.

பிந்த்ரா பங்கேற்ற அதே பிரிவில்தான் நரங்கும் கலந்து கொண்டார். 600க்கு 595 என்ற புள்ளிகளையே அவர் பெற்றதால், இறுதிச் சுற்றுக்கு நரங் தகுதி பெற முடியாமல் போனது.

கிரிக்கெட் வாரியம் ரூ.25 லட்சம் பரிசு:

இந்திய கிரிக்கெட் வாரியமும் பிந்த்ராவுக்கு பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.

இதுகுறித்து கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத்பவார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிந்த்ராவுக்கு இதயப்பூர்வ வாழ்த்துக்கள். நாட்டுக்கு அவர் பெருமை தேடித் தந்துள்ளார். இந்திய விளையாட்டுத் துறைக்கு புதிய பெருமையை ஏற்படுத்தியுள்ளார். அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ரூ. 25 லட்சம் பரிசளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

ஜெ. வாழ்த்து:

பிந்த்ராவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அபினவுக்கு வெற்றியும் புகழும் வரும் காலத்திலும் தொடர தமிழக மக்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.

போட்டியின் இறுதியில் கடுமையான சூழல்நிலையை தைரியமாக எதிர்க் கொண்டது அபினவ்வின் தெளிவை காட்டுகிறது. 'வெற்றிகள் தொடரட்டும். உங்களின் வெற்றி எங்களுக்கு பெருமை அளிக்கிறது' என்று கூறியுள்ளார்.
--
People Of Thambiluvil

Friday, August 8, 2008

பீஜிங் ஒலிம்பிக் இன்று துவக்கம்!

உலகமே ஆவலுடன் எதிர்ப்பா‌ர்த்திருந்த பீஜிங் ஒலிம்பிக் போட்டிகள் இன்று இரவு 8 மணிக்கு துவங்குகிறது. இதையொட்டி மாலை 5.45 மணிக்கு பீஜிங் பறவைக்கூடு மைதானத்தில் கோலாகல துவக்க நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
PTI Photo FILE

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகள், உலகின் தலைசிறந்த விளையாட்டுத் தொடராக விளங்கி வருகிறது. இதில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு உலகளவில் தலைசிறந்த வீரர் என்ற மகுடமும் கிடைக்கிறது.

இன்று (8ஆம் தேதி) துவங்கி 24ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் மொத்தம் 205 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். 2008 ஒலிம்பிக் போட்டிக்காக மொத்தம் 37 விளையாட்டு மைதானங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 31 பீஜிங்கில் உள்ளது.

இப்போட்டிகளை கண்டு ரசிக்க அய‌ல்நாட்டில் இருந்து 5 லட்சம் சுற்றுலா பயணிகள் பீஜிங்கிற்கு வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக சீன அரசின் சார்பில் 40 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் 100 கோடிக்கு சமம்) செலவிடப்பட்டுள்ளது.

இன்று மாலை மாலை 5.45 மணியளவில் துவங்கும் முதல்கட்ட துவக்க விழா ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நடக்கிறது. இதில் அந்நாட்டு தேசிய மற்றும் உள்ளூர் அளவில் 28 கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இந்தக் கலைநிகழ்ச்சிகளில் 15,000 கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதைத் தொடர்ந்து 7 மணியளவில் பார்வையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு, 7.56 மணியளவில் ஒலிம்பிக் போட்டிக்கான இறுதி கவுண்ட்-டவுன் துவங்குகிறது. சரியாக 8 மணிக்கு துவங்கும் ஒலிம்பிக் முக்கிய துவக்க விழா நள்ளிரவு 11.30 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 5.45 மணியளவில் துவங்கும் முதற்கட்ட துவக்க விழாவில் ஒலிம்பிக் வளையங்கள் அணிவகுப்பு, போட்டியில் பங்கேற்கும் பல்வேறு சர்வதேச நாடுகளின் தேசியக் கொடி அணிவகுப்பு மற்றும் தேசிய கீதம் பாடுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் 14 நிமிடங்கள் நடைபெறும். இதைத் தொடர்ந்து 2 கட்டங்களாக வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும்.

துவக்க விழாவின் இறுதி 2 மணி நேரத்தில் வீரர்களின் அணிவகுப்புக்கு இடையே கண்ணைக் கவரும் ஒளியுடன் கூடிய வாண வேடிக்கை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

--
People Of Thambiluvil

--
Posted By thambiluvil to இலங்கை மற்றும் உலக செய்திகள். at 8/08/2008 06:36:00 AM


--
People Of Thambiluvil

பீஜிங் ஒலிம்பிக் இன்று துவக்கம்!

உலகமே ஆவலுடன் எதிர்ப்பா‌ர்த்திருந்த பீஜிங் ஒலிம்பிக் போட்டிகள் இன்று இரவு 8 மணிக்கு துவங்குகிறது. இதையொட்டி மாலை 5.45 மணிக்கு பீஜிங் பறவைக்கூடு மைதானத்தில் கோலாகல துவக்க நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
PTI Photo FILE

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகள், உலகின் தலைசிறந்த விளையாட்டுத் தொடராக விளங்கி வருகிறது. இதில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு உலகளவில் தலைசிறந்த வீரர் என்ற மகுடமும் கிடைக்கிறது.

இன்று (8ஆம் தேதி) துவங்கி 24ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் மொத்தம் 205 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். 2008 ஒலிம்பிக் போட்டிக்காக மொத்தம் 37 விளையாட்டு மைதானங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 31 பீஜிங்கில் உள்ளது.

இப்போட்டிகளை கண்டு ரசிக்க அய‌ல்நாட்டில் இருந்து 5 லட்சம் சுற்றுலா பயணிகள் பீஜிங்கிற்கு வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக சீன அரசின் சார்பில் 40 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் 100 கோடிக்கு சமம்) செலவிடப்பட்டுள்ளது.

இன்று மாலை மாலை 5.45 மணியளவில் துவங்கும் முதல்கட்ட துவக்க விழா ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நடக்கிறது. இதில் அந்நாட்டு தேசிய மற்றும் உள்ளூர் அளவில் 28 கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இந்தக் கலைநிகழ்ச்சிகளில் 15,000 கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதைத் தொடர்ந்து 7 மணியளவில் பார்வையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு, 7.56 மணியளவில் ஒலிம்பிக் போட்டிக்கான இறுதி கவுண்ட்-டவுன் துவங்குகிறது. சரியாக 8 மணிக்கு துவங்கும் ஒலிம்பிக் முக்கிய துவக்க விழா நள்ளிரவு 11.30 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 5.45 மணியளவில் துவங்கும் முதற்கட்ட துவக்க விழாவில் ஒலிம்பிக் வளையங்கள் அணிவகுப்பு, போட்டியில் பங்கேற்கும் பல்வேறு சர்வதேச நாடுகளின் தேசியக் கொடி அணிவகுப்பு மற்றும் தேசிய கீதம் பாடுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் 14 நிமிடங்கள் நடைபெறும். இதைத் தொடர்ந்து 2 கட்டங்களாக வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும்.

துவக்க விழாவின் இறுதி 2 மணி நேரத்தில் வீரர்களின் அணிவகுப்புக்கு இடையே கண்ணைக் கவரும் ஒளியுடன் கூடிய வாண வேடிக்கை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

--
People Of Thambiluvil

--
Posted By thambiluvil to இலங்கை மற்றும் உலக செய்திகள். at 8/08/2008 06:36:00 AM


--
People Of Thambiluvil

Wednesday, August 6, 2008

உலோக கழிவுகளிலிருந்து உருவாக்கப்பட்ட இயந்திரத்தின் மூலம் உயிர்பிழைத்த சிறுமி


 வீரகேசரி நாளேடு 8/6/2008 9:02:45 PM - கார் திருத்துமிடத்தில் இருந்து பெற்ற உலோகங்களைப் பயன்படுத்தி மருத்துவர் ஒருவரால் சுயமாக வடிவமைக்கப்பட்ட கருவி மூலம், சிறுநீரகம் செயலிழந்த பச்சிளம் குழந்தையொன்று காப்பாற்றப்பட்ட அதிசயம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. மில்லி கெல்லி என்ற இந்தக் குழந்தை, குடல் பகுதி உடலுக்கு வெளியே தள்ளிய நிலையில் பிறந்தது.

இந்நிலையில் மேற்படி குறைபாட்டை சீர்செய்யும் முகமாக சத்திரசிகிச்சையொன்றுக்கு குழந்தை உட்பட்ட சமயம், அதன் சிறுநீரகங்கள் செயலிழக்க ஆரம்பித்தன. இத்தகைய நெருக்கடியான நிலையில் வழமையாக சிறுநீரகம் செயலிழந்த குழந்தைகளுக்கு உபயோகிக்கப்படும் செயற்கை உபகரணத்தை இக்குழந்தைக்கு பொருத்த முடியாத வகையில், குழந்தை மிகவும் சிறியதாக காணப்பட்டதால் என்ன செய்வது என மருத்துவர்கள் திண்டாடினர்.

மேற்படி மருத்துவ சிகிச்சைக்கு தலைமை தாங்கிய மருத்துவர் மல்கொல்ம் கோல்தார்ட், சிரேஷ்ட சிறுவர்கள் சிறுநீரக சிகிச்சை தாதியான ஜீன் குரோஸியர் என்பவருடன் இணைந்து கார் திருத்துமிடத்திலிருந்து பெறப்பட்ட பொருட்களை உபயோகித்து சிறிய சிறுநீர் சுத்திகரிப்பு உபகரணமொன்றை உருவாக்கினார்.

இதனையடுத்து குழந்தையின் சொந்த சிறுநீரகங்கள் குணமடையும் வரை 7 நாட்களுக்கு இந்த உபகரணம் பொருத்தப்பட்டது. இந்த உபகரணத்தின் மூலம், சிறிது சிறிதாக இறப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறுமி, தற்போது உயிர் பிழைத்து ஆரோக்கிய நிலையில் காணப்படுவதாக கூறப்படுகிறது.

தனது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் குறித்து அதன் தாயாரான ரெபேகா விபரிக்கையில், ""வர்ணப்பூச்சு அடையாளங்களுடன் பச்சை நிறத்தில் காணப்பட்ட அந்த உலோகப் பெட்டி எனது மகளின் உயிரைக் காப்பாற்றப் போகிறது என நான் கனவிலும் நம்பவில்லை. தற்போது எனது மகளுக்கு இரண்டு வயதாகிறது. அவள் தனது சொந்த சிறுநீரகங்களுடன் இயல்பு வாழ்க்கை வாழ்கின்றாள்'' என்று கூறினார்

--
People Of Thambiluvil
site statistics