Thambiluvil chat

The Srilanka And world news

Saturday, August 16, 2008

ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டம்: போல்ட் உலக சாதனை!

PTI Photo FILE
பீஜிங் ஒலிம்பிக் தொடரில் உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரரை அறிமுகப்படுத்தும் 100 மீட்டர் இறுதிப் போட்டியில், ஜமைக்கா வீரர் யுசைன் போல்ட் பந்தய தூரத்தை 9.69 விநாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார்.

சற்றுமுன் (இந்திய நேரப்படி 8 மணியளவில்) நடந்து முடிந்த இப்போட்டியில், ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அசாஃபா பாவல் 5வது இடத்தையே பிடித்தார்.

100 மீட்டர் ஓட்டத்தின் இறுதிப்போட்டியில் யுசைன் போல்ட், மற்றொரு ஜமைக்கா வீரர் அசாஃபா பாவல் உள்ளிட்ட 8 பேர் பங்கேற்றனர். அமெரிக்காவின் டைசன்-கே தகுதிச்சுற்றில் பந்தய தூரத்தை 10.05 நொடிகளில் கடந்த காரணத்தால் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

போட்டி துவங்கிய 3 நொடிகளுக்கு உள்ளாகவே போல்ட் முன்னிலை பெற்றார். 6வது, 7வது நொடியில் மற்ற வீரர்களைக் காட்டிலும் போல்ட் வெகு தூரம் முன்னேறினார். தங்கத்தை வெல்வது உறுதி என்று தெரிந்தவுடன், போட்டி முடிவதற்கு முன்பாகவே தனது நெஞ்சில் கையை தட்டி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

முடிவில் 9.69 நொடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து யுசைன் போல்ட் தங்கப் பதக்கத்தை வென்றார். டிரிடினாட்-டொபாகோ நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் தாம்ஸன் (9.89 விநாடி) வெள்ளிப் பதக்கத்தையும், அமெரிக்க வீரர் வால்டர் டிக்ஸ் (9.91 விநாடி) வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச் சென்றனர்.

இப்போட்டியில் போல்ட்-க்கு கடும் சவாலாக விளங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட அசாஃபா பாவல் பந்தய தூரத்தை 9.95 நொடிகளில் கடந்து 5வது இடத்தையே பிடித்தார்.

--
People Of Thambiluvil

No comments:

site statistics