|
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகள், உலகின் தலைசிறந்த விளையாட்டுத் தொடராக விளங்கி வருகிறது. இதில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு உலகளவில் தலைசிறந்த வீரர் என்ற மகுடமும் கிடைக்கிறது.
இன்று (8ஆம் தேதி) துவங்கி 24ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் மொத்தம் 205 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். 2008 ஒலிம்பிக் போட்டிக்காக மொத்தம் 37 விளையாட்டு மைதானங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 31 பீஜிங்கில் உள்ளது.
இப்போட்டிகளை கண்டு ரசிக்க அயல்நாட்டில் இருந்து 5 லட்சம் சுற்றுலா பயணிகள் பீஜிங்கிற்கு வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக சீன அரசின் சார்பில் 40 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் 100 கோடிக்கு சமம்) செலவிடப்பட்டுள்ளது.
இன்று மாலை மாலை 5.45 மணியளவில் துவங்கும் முதல்கட்ட துவக்க விழா ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நடக்கிறது. இதில் அந்நாட்டு தேசிய மற்றும் உள்ளூர் அளவில் 28 கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இந்தக் கலைநிகழ்ச்சிகளில் 15,000 கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதைத் தொடர்ந்து 7 மணியளவில் பார்வையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு, 7.56 மணியளவில் ஒலிம்பிக் போட்டிக்கான இறுதி கவுண்ட்-டவுன் துவங்குகிறது. சரியாக 8 மணிக்கு துவங்கும் ஒலிம்பிக் முக்கிய துவக்க விழா நள்ளிரவு 11.30 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 5.45 மணியளவில் துவங்கும் முதற்கட்ட துவக்க விழாவில் ஒலிம்பிக் வளையங்கள் அணிவகுப்பு, போட்டியில் பங்கேற்கும் பல்வேறு சர்வதேச நாடுகளின் தேசியக் கொடி அணிவகுப்பு மற்றும் தேசிய கீதம் பாடுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் 14 நிமிடங்கள் நடைபெறும். இதைத் தொடர்ந்து 2 கட்டங்களாக வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும்.
துவக்க விழாவின் இறுதி 2 மணி நேரத்தில் வீரர்களின் அணிவகுப்புக்கு இடையே கண்ணைக் கவரும் ஒளியுடன் கூடிய வாண வேடிக்கை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
--
People Of Thambiluvil
--
Posted By thambiluvil to இலங்கை மற்றும் உலக செய்திகள். at 8/08/2008 06:36:00 AM
--
People Of Thambiluvil
No comments:
Post a Comment