பீஜிங்கில் ஒலிம்பிக் போட்டியில் 5 தங்கப் பதக்கங்கள் (ஆகஸ்ட் 13ஆம் தேதி நிலவரப்படி) வென்றதன் மூலம் மொத்தம் 11 ஒலிம்பிக் தங்கங்களை வென்று உலகின் தலைசிறந்த ஒலிம்பிக் நீச்சல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள மைக்கேல் பெல்ப்ஸ் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். தந்தை ஃப்ரெட் காவல்துறை அதிகாரி. தாய் டெப்பி ஆசிரியை. பெல்ப்சின் மூத்த சகோதரி விட்னியும் நீச்சல் வீராங்கனை. பெல்ப்ஸுக்கு 7 வயதாக இருந்த போதே அவரது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். பயிற்சியாளர் பாப் பவ்மென், 11 வயதில் மைக்கேல் பெல்ப்ஸ்-ஐ பார்த்தார். அந்த கணமே பவ்மெனின் மனதில், பெல்பஸ் உலக சாம்பியனாக நிச்சயம் வருவார் எனத் தெரிந்து விட்டது. இதையடுத்து அவரது பெற்றோரிடம் பேசிய பவ்மென், "பெல்ப்ஸ் மனது வைத்தால் உலகின் தலைசிறந்த நீச்சல் வீரனாக முன்னேற முடியும்" என தன் மனதில் தோன்றியதை பக்குவமாக எடுத்துரைத்தார். அவர் அன்று சொன்ன வார்த்தை, ஆகஸ்ட் 13ஆம் தேதி உலகமே வியக்கும் வண்ணம் பீஜிங்கில் நிறைவேறியுள்ளது. வெற்றியின் ரகசியம்: போட்டியிடும் மனப்பான்மை, மிக சிறப்பான உடல் தகுதியே பெல்ப்ஸ் சாதனையின் ரகசியம் என்று பயிற்சியாளர் பாப் பவ்மென் கூறியுள்ளார். உடல் தகுதி என்று பவ்மென் குறிப்பிட்டத்தை கூர்ந்து கவனித்தால் அதன் உள் அர்த்தம் புரியும். ஒரு காமிக்ஸ் புத்தகத்தில் வரையப்படும் கதாபாத்திரம் போல் செதுக்கப்பட்ட உடல், அகண்ட தோள்கள், மிகக் குள்ளமான கால்கள் உள்ளிட்ட உடல் அம்சங்கள் நீச்சலில் அவருக்கு பேருதவியாக இருந்துள்ளது. மொத்தம் 6 அடி 4 அங்குலம் உயரமுடைய பெல்ப்ஸ்-ன் கைகள் மற்றவர்களைக் காட்டிலும் சற்றே நீளமானது என்பதால், உயரத்திற்கு ஏற்ற அளவை விட 3 அங்குலம் கூடுதலான தூரத்தை எட்டக் கூடிய சிறப்புத் தகுதியை பெல்ப்ஸ் பெற்றிருந்தார் என்பது சிலருக்கே தெரிந்த விஷயம். நீச்சல் போட்டிகளில் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு செல்லும் வீரர்கள் அங்கிருந்து திரும்பி வர நீருக்குள்ளேயே ஒரு குட்டிக்கரணம் அடித்து கால்களால் சுவரை உதைத்து ஒரு உந்துதலை உருவாக்கி மீண்டும் நீந்திச் செல்வர். இந்த விஷயத்திலும் பெல்ப்ஸ் சற்றே வித்தியாசமானவர். மற்ற நீச்சல் வீரர்களைப் போல் குட்டிக்கரணம் அடிக்கும் போது பெல்ப்ஸ் அதிக ஆழத்திற்கு செல்ல மாட்டார். நீரின் மேல்மட்டத்தில் இருப்பதால் நீரின் ஈர்ப்பு விசை மிகக் குறைவாக இருக்கும். இதன் காரணமாக மற்ற வீரர்கள் கால்களால் சுவரை உதைத்து... | |
No comments:
Post a Comment